என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அமெரிக்க வீரர்கள் பலி
நீங்கள் தேடியது "அமெரிக்க வீரர்கள் பலி"
ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். #Afghanistan
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு அமெரிக்க படை வீரர்கள் பக்கபலமாக இருந்து வருகின்றனர். இதனால் அமெரிக்க வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைநகர் காபூலில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்துக்கு அருகே அமெரிக்க வீரர்கள் சிலர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கி வெடித்து சிதறியது.
இதில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, குண்டுவெடிப்பில் உயிர் இழந்த அமெரிக்க வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். #Afghanistan

×

X